27/Sep/2020 07:51:35
byc.raaj-erd- கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில், காணொலிக்
காட்சி வாயிலாக இன்று (27-9-2020) நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழா
பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று
100 கழக முன்னோடிகளுக்கு
பொற்கிழி வழங்கி
ஆற்றிய உரை
வருமாறு:
கரூர்
மாவட்ட திராவிட
முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெறக் கூடிய
முப்பெரும் விழாவில் கலந்து கொள்ளக் கூடிய
வாய்ப்பை ஏற்படுத்திக்
கொடுத்த கரூர்
மாவட்டக் கழகப்
பொறுப்பாளர் ஆற்றல் மிகுந்த செயல்வீரர் செந்தில்
பாலாஜி அவர்களுக்கு
முதற்கண் எனது
நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
கொரோனா
கால ஊரடங்கு
தொடங்கியதில் இருந்தே, தினமும் காலையும் மாலையும்
காணொலி மூலமாக
தமிழ்நாடு முழுவதும்
இருக்கும் தொண்டர்களை,
நிர்வாகிகளைச் சந்தித்து கலந்துரையாடிக் கொண்டே இருக்கிறேன்.
எந்தச்
சூழலிலும் நம்மால்
கட்சிப் பணியாற்ற
முடியும் என்பதற்கு
உதாரணமாகவே இதனைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.
இதன் உச்சக்கட்டமாக
3700-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பொதுக்குழுவையே
காணொலி மூலமாக
நடத்திக் கட்சியின்
பொதுச் செயலாளரையும்,
பொருளாளரையும் அதில் தேர்வு செய்தோம். பல்வேறு
தீர்மானங்களை, நாட்டு மக்களின் பிரச்னைகளை அடிப்படையாக
வைத்து, மத்திய
– மாநில அரசுகளுக்கு
எச்சரிக்கை விடுக்கும் விதமாக நிறைவேற்றப்பட்டன.
75-க்கும்
மேற்பட்ட ஊர்களில்
இருந்து அனைத்துப்
பொதுக்குழு உறுப்பினர்களும் இணைய சேவை மூலமாக
இணைக்கப்பட்டார்கள். ஒரே இடத்தில்
கூடினால் எத்தகைய
சிறப்போடு பொதுக்குழு
பிரமாண்டமாக நடக்குமோ; அத்தகைய பிரமாண்டத்துடன் - எழுச்சியுடன் - உணர்ச்சியுடன்
- பெருமிதத்துடன் அந்தப் பொதுக்குழுவை நாம் நடத்திக்
காட்டினோம். தமிழகத்தில் மட்டுமல்ல; அகில இந்திய
அளவில் எந்தக்
கட்சியும் இவ்வளவு
பெரிய பிரமாண்டமான
கூட்டத்தை காணொலி
மூலமாக நடத்தியதில்லை.
திராவிட
முன்னேற்றக் கழக நிர்வாகிகளைப் பொறுத்தவரை கோடு
போட்டுக் காட்டினாலே
ரோடு போடக்
கூடியவர்கள் என்பதற்கு உதாரணம் தான், கரூர்
மாவட்டத்தில் நடைபெறக் கூடிய இந்த முப்பெரும்
விழா.கரூர்
மாவட்ட திமுக
பொறுப்பாளரான செயல்வீரர் செந்தில் பாலாஜி அவர்கள்,
காணொலி மூலமாகவே
முப்பெரும் விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார்.
530-க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து 50 ஆயிரம் பேர் இதில் பங்கேற்கக்கூடிய
வகையில் மிகப்
பிரமாண்டமாக நடத்திக் காட்டியிருக்கிறார்.
இதற்காக அவரை
நான் பாராட்டுகிறேன்;
வாழ்த்துகிறேன். இதேபோன்ற கூட்டங்களை மற்ற மாவட்டக்
கழகங்களும் நடத்துவதற்கான பாதையைக் கரூர் மாவட்ட
திமுக
தொடங்கி வைத்துள்ளது.
கொரோனா
காலம் என்பதால்
கூட்டங்கள் நடத்த இயலாது என்பது ஒருபக்கம்
இருந்தாலும் - தொழில்நுட்ப வசதிகளை முழுமையாகப் பயன்படுத்தி
இத்தகைய கூட்டங்களை
நாம் தொடர்ச்சியாக
நடத்த வேண்டும்.
அனைத்துத் தொழில்நுட்ப
வசதிகளையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இது தொழில்நுட்ப
யுகம். அதனாலதான்,
தொலைக்காட்சிகள், இணையதளங்கள், வாட்ஸ்அப், பேஸ்புக், யூடியூப்
மூலமாக நமது
கொள்கைகளைப் பரப்பக்கூடிய பணியை செய்துக் கொண்டு
வருகிறோம். இப்போது காணொலிகள் மூலமாகவும் ஒன்றிணைந்து
நாம் நமது
பரப்புரையைச் செய்து வருகிறோம். நாளைக்கு வேறொரு
தொழில்நுட்பம் வந்தால் அதனையும் பயன்படுத்திக் கொள்வோம்.
என்ன
சொல்கிறோம் என்பது தான் முக்கியமே தவிர
- எதன் மூலம்
சொல்கிறோம் என்பது முக்கியமல்ல. எமர்ஜென்சி காலமாக
இருந்தாலும் - கொரோனா காலமாக இருந்தாலும் - நமது
போராட்டங்கள் நடக்கும், நமது நிகழ்ச்சிகள் நடக்கும்
என்பதற்கு எடுத்துக்காட்டாக
கரூர் மாவட்டத்தில்
இந்த நிகழ்ச்சியை
நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இதே
கரூர் மாவட்டத்தில்
ஆளும் அ.தி.மு.க. அரசு
கொடுத்த குடைச்சலை
நீங்கள் மறந்திருக்க
மாட்டீர்கள். அரவக்குறிச்சி
சட்டமன்ற உறுப்பினர்
என்ற முறையில்
தனது தொகுதி
மேம்பாட்டு நிதியில் இருந்து கரூர் மாவட்டத்தில்
உள்ள அரசு
மருத்துவமனைகளுக்கு வெண்டிலேட்டர் கருவிகள்
வாங்குவதற்கு ஒரு கோடியே மூன்று லட்சம்
ரூபாயை செந்தில்
பாலாஜி
ஒதுக்கீடு செய்தார்கள். இதற்கான அனுமதிக் கடிதத்தையும்
மாவட்ட ஆட்சியரிடம்
கொடுத்துவிட்டார்.ஆனால், அவரது பரிந்துரையை மாவட்ட
ஆட்சியர் நிராகரித்துவிட்டார்.
சட்டமன்ற உறுப்பினர்
அவரது தொகுதிக்குத்தான்
ஒதுக்க வேண்டும்
என்று காரணமும்
சொன்னார். கொரோனா
போன்ற கொடிய
வைரஸ் பரவி
வரும் காலத்தில்
மக்களுக்கு உதவி செய்யக் கூட அனுமதி
மறுத்தார்கள். அப்போதே இதனைக் கண்டித்து அறிக்கை
வெளியிட்டேன். போராட்டங்களும் நடந்தன.
அரவக்குறிச்சி
மக்கள் அதிகமாக
வந்து சேர்வது
கரூர் மருத்துவமனை
என்பதால் இவ்வாறு
நிதியை அக்கறையுடன்
ஒதுக்கி இருக்கிறார்
செந்தில் பாலாஜி.
இதுபற்றி சென்னை
உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி
மனுத் தாக்கல்
செய்தார். நீதியரசர்கள்
எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா
அடங்கிய பெஞ்ச்
இதனை விசாரித்து
கரூர் மாவட்ட
கலெக்டரின் உத்தரவை ரத்து செய்துள்ளது. "கொரோனா என்ற அசாதாரணமான, கொடிய
சூழல் நிலவும்
இந்த நேரத்தில்
செந்தில் பாலாஜியின்
பரிந்துரையை ஏற்கலாம். கரூர் மாவட்டத்தில் உள்ள
பிற தொகுதிக்கும்
நிதியைப் பயன்படுத்தலாம்.
எனவே கரூர்
கலெக்டரின் உத்தரவை ரத்து செய்கிறேன்" என்று தீர்ப்பு அளித்துள்ளார்கள்.
இப்படி
ஒவ்வொரு விஷயத்துக்கும்
நீதிமன்றத்தை நாடி, அவர்களது அனுமதி பெற்றுத்தான்
மக்களுக்கு நன்மை செய்ய வேண்டி இருக்கிறது.
அதற்காக நாம்
தயங்கப் போவதில்லை;
பின்வாங்கப் போவதில்லை.
‘ஆட்சியில்
இருந்தால் செயல்படுத்துவது
- ஆட்சியில் இல்லாவிட்டால் செய்ய வைப்பது’ - இதுதான்
திமுகவின் முழக்கமாக
நேற்றும் இருந்தது;
இன்றும் இருக்கிறது.
எந்தவிதமான
தொழில்நுட்ப வசதிகளும் இல்லாத காலத்தில் உழைத்தவர்களான
நீங்கள் அனைவரும்
எத்தகைய தியாகத்தைச்
செய்திருப்பீர்கள், எவ்வளவு துன்பத்தை
அனுபவித்திருப்பீர்கள் என்பதை நான்
அறிந்தவன் என்பதால்
இங்கிருந்தபடியே உங்கள் அனைவரையும் வணங்குகிறேன்.நீங்கள்
இன்றைய தலைமுறையை
வழிகாட்டுங்கள். உற்சாகப் படுத்துங்கள் என்று கேட்டுக்
கொள்கிறேன்.
மத்திய
அரசு கொண்டு
வரும் விவசாயச்
சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் - மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய
விரோத சட்டத்துக்குத்
தலையாட்டிய எடப்பாடி அரசைக் கண்டித்தும் நாளைய
தினம் ஆர்ப்பாட்டம்
நடைபெற உள்ளது.நாங்கள் மட்டுமல்ல;
பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான
சிரோமணி அகாலிதளம்
இந்தச் சட்டங்களை
எதிர்த்துள்ளது. மத்திய அமைச்சரவையில் இருந்து ஒரு
அமைச்சரே விலகி
உள்ளார். இதை
விட மிகப்பெரிய
எதிர்ப்பு வேறு
எதுவும் இருக்க
முடியாது.
ஆனால்,
எடப்பாடி பழனிசாமி
ஆதரிக்கிறார். தான் ஆதரிப்பது மட்டுமில்லாமல்; மற்றவர்களையும்
ஆதரிக்கச் சொல்கிறார்.
“நானும் விவசாயி,
நானும் விவசாயிதான்”
என்று எடப்பாடி
பழனிசாமி சொல்லிக்
கொள்கிறாரே தவிர; விவசாயியாக நடந்துகொள்ளவில்லை. விவசாயிகள் விரோதச் சட்டத்துக்கு ஆதரவாக
அறிக்கை விட்டிருக்கிறார்.
இதைவிட விவசாயிகளுக்கு
வேறு துரோகம்
இருக்க முடியுமா?இந்தத் துரோகச்
சட்டத்தை ஆதரித்ததால்
தான், பிரதமர்
மோடி, எடப்பாடி
பழனிசாமியைப் பாராட்டுகிறார். மாநில உரிமைகளுக்காக போராடாத
தலையாட்டிப் பொம்மையாக பழனிசாமி இருப்பதால் தான்
பிரதமர் மோடி
அவரைப் பாராட்டுகிறார்.
இந்த
அமைச்சரவையை ‘கிரிமினல் கேபினெட்’ என்று நான்
குற்றம் சாட்டினேன்.
அத்தகைய குற்றங்கள்
அதிகம் ஆகியிருக்கிறதே
தவிரக் குறையவில்லை.இன்றைக்கு முதலமைச்சராக
இருக்கும் எடப்பாடி
பழனிசாமி மீது
3,500 கோடி மதிப்பிலான டெண்டர் முறைகேடு வழக்கு
இன்னும் நிலுவையில்
தான் இருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றம்,
இந்தப் புகாரை
சி.பி.ஐ. விசாரிக்கலாம்
என்று உத்தரவு
போட்டது.
ஆர்.கே.நகர்
தேர்தலில் 89 கோடி ரூபாயைப் பட்டுவாடா செய்ததற்காக
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட 8 அமைச்சர்கள்
மீது புகார்கள்
இருக்கிறது. இப்படி அமைச்சர்கள் ஒவ்வொருவர் மீதும்
கொடுத்த புகார்களே
மலையளவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையிலும் டெல்லி
சி.பி.ஐ-யிலும்
சென்னை உயர்நீதிமன்றத்திலும்,
உச்சநீதிமன்றத்திலும் இருக்கின்றன. இப்படிப்பட்ட
கேபினெட்டை ‘கிரிமினல் கேபினெட்’ என்று சொல்லாமல்
என்ன சொல்வது?
இந்த கிரிமினல்
கேபினெட்டை, கோட்டையை விட்டு துரத்தி சிறையில்
வைக்க மக்கள்
தயாராகி விட்டார்கள்.
இந்த
ஆட்சியில் மொத்த
மக்களும் நிம்மதியாக
இல்லை.மத்திய
அரசு எல்லா
வகையிலும் மக்களுக்கு
சலுகைகளை தருவது
இல்லை. மத்திய
அரசுக்கு மக்களைப்
பற்றி அக்கறையே
இல்லை. மொத்தத்தில்
அவர்கள், அவர்களுக்காக
ஆண்டு கொள்கிறார்கள்.
அவர்கள், மக்களுக்காக
ஆளவில்லை. மக்களுக்காக,
மக்களைப் பற்றி
கவலைப்படக் கூடிய, மக்களுக்கு நன்மை செய்யக்
கூடிய, மக்களது
எதிர்பார்ப்பை செய்து கொடுக்கக் கூடிய ஒரே
ஆட்சி திராவிட
முன்னேற்றக் கழக ஆட்சி தான்.அதனை
உருவாக்க மக்கள்
தயாராகிவிட்டார்கள். நாம் அதற்கான
பணிகளைத் தொடங்குவோம்
என்றார் திமுக
தலைவர் மு.க.ஸ்டாலின்.