29/Jun/2021 02:54:46
புதுக்கோட்டை, ஜூன்: பெட்ரோல்-டீசல்
விலை உயர்வைக் கண்டித்தும், திரும்பப்பெறக்கோரியும் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள்
கட்சிகளில் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, அன்னவாசலில்
பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆலங்குடி வடகாடு முக்கம் அருகே
நடைபெற்ற ஆர்ப்பட்டத்திற்கு
ஒன்றியச் செயலாளர்கள் எஸ்.வடிவேல்-சிபிஎம்,
ஆர்.சொர்ணக்குமார்-சிபிஐ, சி.பாஸ்கரன்-சிபிஐ(எம்எல்), எஸ்.அம்பேத்வளவன்-விசிக ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில்
கலந்துகொண்டு சிபிஎம் மாவட்டச் செயலளர் எஸ்.கவிவர்மன், சிபிஐ மாவட்டச் செயலாளர் மு.மாதவன், சிபிஐ(எம்எல்) மாவட்டச்
செயலாளர் பழ.ஆசைத்தம்பி, விசிக மாவட்டச் செயலாளர் சசி.பா.கலைவேந்தன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
அன்னவாசலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர்கள் எம்.ஆர்.சுப்பபையா-சிபிஎம்,
என்.விஜயரங்கன்-சிபிஐ ஆகியோர் தலைமை
வகித்தனர். சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் கே.ஆர்.தர்மராஜன், சிபிஎம்
மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம் உள்ளிட்டோர் பேசினர்.

பொன்னமராவதியில்... வரலாறு காணாத பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமான ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் என் பக்ருதீன தலைமை வகித்தார். ,சிபிஐ பொறுப்பாளர் ஆர் பிரதாப்சிங், விடுதலை சிறுத்தை கட்சி நகர செயலாளர் மலைதேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விதொச மாநில பொருளாளர் தோழர் எஸ். சங்கர், சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர் கே குமார் பி ராமசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிர்வாகிகள் பிச்சை, ஏ சவுந்தர்ராஜன், எம். மாயழகு மற்றும் சிபிஎம் கட்சி நிர்வாகிகள் எம் நாவலர், பி. பாஸ்கரன், ஓட்டுனர் எம். நாகராஜ் உள்பட சிபிஐ, வி சிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
கோரிக்கைகள்: வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் குறைக்கும் வகையில் கலால் வரிகளை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.
உயிர்காக்கும் மருந்துகள்
சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுத்து தங்குதடையின்றி மருந்துகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்களின்
விலை உயர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். கோவிட் தடுப்பூசி தங்குதடையின்றி
அனைவருக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.