09/Nov/2020 11:17:41
புதுக்கோட்டையில் பத்திரப்பதிவுக்கு ரூ.7000 லஞ்சம் பெற்ற சார் பதிவாளரை புதுக்கோட்டை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார் வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலகத்தில் சரவணன் என்பவர் சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார் . இவர் பத்திரப்பதிவுக்காக வருவர்களிடம் லஞ்சமாக ஆயிரக்கணக்கில் பணம் கேட்பது வழக்கம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை சுப்பிரமணியன் என்பவர் தனது விவசாய நிலத்திற்கு பத்திரப்பதிவு செய்ய வரும்போது அவரிடம் ரூ.15 ஆயிரம்லஞ்சம் கேட்ட தாகவும் இதனை யடுத்து சார்பதிவாளர் சரவணனிடம் சுப்பிரமணி ரூ.5,000 கொடுத்துவிட்டு மீதி தொகைக்கு தன்னிடம் வசதி இல்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் அதற்கு செவி சாய்க்காத சார்பதிவாளர் சரவணன் மேலும் 7,000 ரூபாய் லஞ்ச தொகை கேட்டதுடன் பணத்தை இடைத்தரகர் செந்தில் குமார் என்பவரிடம் கொடுக்கும்படியும் கூறியுள்ளார்.
இதனையடுத்து, சுப்ரமணியன் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ. 7 ஆயிரத்தை இடைத்தரகர் செந்தில்குமாரிடம் அளித்துள்ளார் . இததையடுத்து இடைத்தரகர் செந்தில்குமார் புதுக்கோட்டை சார் பதிவாளர் சரவணனிடம் ரூ. 7 ஆயிரம் ரூபாய் கொடுக்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சார்பதிவாளர் சரவணனை கையும் களவுமாக பிடித்தனர் .
இதைத்தொடர்ந்து டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தற்போது சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக புதுக்கோட்டை சார்பதிவாளர் சரவணன் மற்றும் பணிபுரியும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பத்திரப்பதிவுக்கு பொதுமக்களிடம் லஞ்சம் பெற்றது குறித்து சார்பதிவாளர் சரவணனை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அலுவலகத்திலேயே வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருன்றனர்.