10/Nov/2020 01:00:46
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு சங்கதலைவர் டாக்டர் பி.தனசேகரன் தலைமை வகித்தார்.முன்னாள் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி முன்னிலை வகித்தார். முன்னாள் தலைவர் டி. ரவிச்சந்திரன் வரவேற்றர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ய மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பூவதி யிடம், சங்கதலைவர் டாக்டர் பி.தனசேகரன் ரூ.2.75 லட்சம் மதிப்பிலான இரத்த மாதிரி வகைகள் பாதுகாப்பில் வைக்கும் குளிர்சாதனப் பெட்டியை ஒப்படைத்தார்.
இதையடுத்து அவர் பேசுகையில், பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் பல்வேறு சமூக சேவைகளை செய்துவருகின்றது மறைந்த முன்னாள் துணைஆளுநர் ஆர். முத்துச்சாமி ரோட்டரிக்கு நிதி வழங்கினார். அந்த நிதியிலிருந்து புதுக்கோட்டைமருத்துவக் கல்லூரிக்கு உபகரணங்கள் வழங்க நிதி கிடைத்தது அந்தத்தொகையில் இரத்த வங்கிக்கு குளிர்சாதனப் பெட்டிவழங்கி உள்ளோம் என்று குறிப்பிட்டார்.
முன்னாள் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி ,பேலஸ்சிட்டி ரோட்டரி சங்க செயல்பாடுகள் பற்றி எடுத்துக் கூறினார் நிகழ்வில், மருத்துவக் கல்லூரி துணைமுதல்வர் டாக்டர் கலையரசி, மருத்துவர்கள் ராஜ்மோகன், இந்திராணி அழகம்மை, செவிலியர் கண்காணிப்பாளர்கள் பியர்லின் மெட்டில்டா,தேன்மொழி, செவிலியர்கள் செந்தமிழ்செல்வி,உஷாராணி, மகேஸ்வரி.
பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கநிர்வாகிகள், ரவி, வழக்குரைஞர் செந்தில்,கருப்பையா, ஆர். கருணாகரன் வீரன், வீராச்சாமி, பாலாஜி, அன்புதனபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கநிர்வாகிகள் மருத்துவமனை, செவிலியர்கள் சிறப்பாக செய்தனர். செயலாளர் வி.என்.எஸ் செந்தில் நன்றி கூறினார்.