26/Nov/2020 10:30:40
புதுக்கோட்டை: மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து புதுக்கோட்டையில் எல்ஐசி மற்றும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ததோடு தங்கள் அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர்.
புதுக்கோட்டை எல்ஐசி கிளை அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தின் கிளைத் தலைவர் வி.லதாராணி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி கோட்டத் துணைத் தலைவர் என்.கண்ணம்மாள், கிளைச் செயலாளர் வி.துரைசிங்கம் மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள் குருமூர்த்தி, ரகுமான், சதாசிவம், முத்தையா, தங்கவேல் உள்ளிட்டோர் பேசினர்.
இந்தியன் வங்கி முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ராமதுரை தலைமை வகித்தார். வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் அருணாச்சலம், ராஜேந்திரன், ஆறுமுகம், மாணிக்கம் உள்ளிட்டோர் பேசினர்.