05/Dec/2020 02:37:04
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஜெயலலிதா மறைந்த நாளில் அவரது உருவப் படத்திற்கு மாலை 6 மணி அளவில் விளக்கேற்றி வைப்வோம் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளனர். முன்னதாக, செனனையிலுள்ள தங்களது முகாம் அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தி வழிபட்டனர்