05/Dec/2020 08:41:28
அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலக்குடி பகுதியில் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்கி உள்ள பொதுமக்களை அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி பார்வையிட்டு ஆறுதல் கூறி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்
கிழக்கு கடற்கரை சாலையில் கட்டுமாவடி முதல் ஏனாதி வரை கடலோர கிராமங்கள் உள்ளன புயல் சின்னம் மற்றும் கனமழை காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் பல ஊர்களில் புயல் பாதுகாப்பு மையத்தில் பொதுமக்களை தங்க வைத்தனர். அங்கு தங்க வைக்கப்பட்ட பொதுமக்களை அறந்தாங்கி எம்எல்ஏ- ரத்தினசபாபதி பார்வையிட்டு ஆறுதல் கூறி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வின்போது, புதுக்கோட்டை டிஆர்ஓ சரவணன், அறந்தாங்கி சப் கலெக்டர் ஆனந்த் மோகன், மணமேல்குடி தாசில்தார் ஜமுனா உட்பட வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்