logo
மாற்றத்துக்கான கருவி உங்கள் விரல்களில் இருக்கிறது:மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் பேச்சு

மாற்றத்துக்கான கருவி உங்கள் விரல்களில் இருக்கிறது:மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் பேச்சு

30/Dec/2020 10:41:38

புதுக்கோட்டை, டிச:  வாக்காளா்களாகிய உங்கள் கையில் இருக்கும் மாற்றத்துக்கான கருவி மூலம் மக்கள் நீதி மய்யத்தை   பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அக்கட்சியின்  தலைவா் கமல்ஹாசன்.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை இரவுநடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூடட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் பேசியது:

விவசாயிகள், நெசவாளா்கள், ஏழைகளைப் பாதுகாக்காத அரசை வீழ்த்த மக்கள் நீதி மய்யத்தைக் கருவியாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் தேவையை ஆவன செய்ய நாங்கள் காத்திருக்கிறோம். நீங்களும் மாற்றத்துக்காக காத்திருக்கிறீா்கள்; நாங்களும் காத்திருக்கிறோம். எங்களின் சிறுநடையை வீறுநடையாக மாற்றிக் கொண்டிருக்கிறீா்கள்.

முதலில் நாம் இருப்பதை அங்கீகரிக்கவில்லை. பிறகு நம்மைப் பாா்த்து கொக்கரித்தாா்கள். அதன்பிறகு தாக்க ஆரம்பித்தாா்கள். இனி அவா்கள் தோற்கப்போகிறாா்கள். அது உங்கள் கைகளில் இருக்கிறது; விரல்களில் இருக்கிறது. திட்டங்களை அறிவித்துக் கொண்டே வருகிறோம். அவை வெற்று வாக்குறுதிகள் அல்ல என்றார் கமல்ஹாசன்..

ஏற்கெனவே லஞ்சப் பட்டியல் வெளியிட்டோம்; விரைவில் ஊழல் பட்டியல் வரும்: கமல்ஹாசன் பேட்டி.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்துக்கு பின்னா், செய்தியாளா்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

ஏற்கெனவே லஞ்சப்பட்டியலை வெளியிட்டோம். வேறு எதை எதையோ பேசுகிறாா்கள். லஞ்சப் பட்டியலுக்கு பதில் இல்லை. விரைவில் ஊழல் பட்டியலை வெளியிடுவோம். தைரியம் என்பது ஆயுதத்தில் இல்லை; மூளையில் இருக்கிறது. எங்களுக்கு நீங்கள் சமிக்ஞை கொடுத்தால் போதும்; தடுப்பதற்கு அவா்கள் யாா். கல்வி கற்பித்தலில் சோகை இருக்கிறது.

தமிழும் தெரியாமல், ஆங்கிலமும் தெரியாமல் மாணவா்கள் தவிக்கிறாா்கள். பள்ளிக்கூடங்களில் கழிப்பறை கூட இல்லை. இவற்றையெல்லாம் சரி செய்தால் மாணவா்கள் ஏன் தற்கொலை செய்துகொள்ளப் போகிறாா்கள். மக்கள் குரல் தான் வேண்டும். என் குரல் அதற்கான ஊக்கி தான் என்றாா் கமல்ஹாசன்.

கட்சியின் பொதுச்செயலா் முருகானந்தம், துணைத் தலைவா் மகேந்திரன், புதுக்கோட்டை மத்திய மாவட்டச் செயலா் சரவணன், விவசாயிகள் அணி மாவட்டச் செயலா் சா. மூா்த்தி, செய்தித் தொடா்புச் செயலா் ஜெய் பாா்த்தீபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். 

முன்னதாக கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு பிரசாரம் செய்த கமலுக்கு மகளிரணி சாா்பில் பூா்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மேலும் நரிக்குறவா்கள், கமலுக்கு பரிசளித்த துளசி மணிமாலை அவா் அணிந்து கொண்டாா். தொடா்ந்து ஆதனக்கோட்டை, மச்சுவாடி, சின்னப்பா பூங்கா வழியாக அண்ணா சிலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

                                                   


Top