15/Mar/2021 07:24:30
ஈரோடு மார்ச்: அதிமுக கூட்டணியில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கிழக்கு தொகுதி வேட்பாளர் யுவராஜா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக வேட்பாளர் களின் வேட்புமனுக்கள் கடந்த மார்ச் 12 -ஆம் முதல் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியானது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து, தமாகா சார்பில் அக்கட்சித் தலைமையால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அக்கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் எம். யுவராஜா, கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவனிடம் திங்கள்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இநநிகழ்வில் ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ- கே.எஸ்.தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர்.