16/Apr/2021 12:16:31
சென்னை, ஏப்.16: கொரோனா 2-ஆவது அலை காவல்துறையில் வேகமாக பரவி கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா 2-ஆவது அலை தொற்றால் சென்னையிவ் 4 உதவி கமிஷனர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட் டுள்ளனர். போக்குவரத்து போலீசார் 13 பேருக்கு பாதிப்பு உள்ளது. கொரோனா முதல் அலையில் சென்னையில் உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட போலீசார் 3,300 பேர் வரை பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கொரோனா 2-ஆவது அலையில் தென் மண்டல கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஏற்பட்டு சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணனுக்கும் தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுகிறார்.