10/May/2021 05:36:43
சென்னை:
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் சுற்றுச்சூழல்துறை இயக்குநர் கே.வி.கிரிதர்
உள்ளிட்ட அதிகாரிகளுடன் சுற்றுச்சூழல், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
சிவ.வீ.மெய்யநாதன் திங்கள்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதில், துறை ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனையின்போது, சுற்றுச்சூழல்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனாவும் உடனிருந்தார்.
தொடர்ந்து,,
அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் என்.சி.சி மற்றும் என்எஸ்எஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில்
ஈடுபட்டார்.
முன்னதாக, சென்னை ஜவகர்லால் நேரு விளையாட்டு மைதானத்தை பார்வையிட்டு, அங்கு நடைபெற்றுவரும் கட்டுமானப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.