17/May/2021 11:45:24
பொன்னமராவதி, மே: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, காரையூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் அறிவித்த கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூ.2000 ஆயிரம் நிவாரணத்தொகையை குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுபபு சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி வழங்கினார்.
காரையூர் நியாய விலைக்டையில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசின் நிவாரணத்தொகையை வழங்கி அமைச்சர் ரகுபதி பேசியதாவது:
கோவிட தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் தமிழக முதல்வர் மேற்கொண்டு வருகிறார். இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதலே பொதுமக்களின்நலனை கருத்தில் கொணடு இதுவரை இருந்து வந்த தேவையற்ற நிதி செலவுகளை குறைத்து மக்களின் நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில, பெண்கள் நகர பேருந்துகளில் இலவசமாகப்பயணிக்கும்
வகையில் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ள
இத்தகைய தருணத்தில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் முதல்வர்
அறிவித்துள்ளதன் அடிப்படையில்
முதல்கட்டமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 நிவராணத் தொகை வழங்கப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 1,004 கூட்டுறவு பொது வினியோகத்திட்ட அங்காடிகளில் உள்ள 4 லட்சத்து 46 ஆயிரத்தி 314 குடும்ப அட்டைதாரர்களுக்கு
ரூ.89 கோடி நிதி தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரிசி
பெறும் குடும்ப அட்டைதாரர் களுக்கு 15.5.2021 -ஆம் தேதியிலிருந்து நிவராண நிதி தலா ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் மற்றும் அரசு அலுவலர்களின் துணையுடன் இந்த சவாலான காலகட்டத்திலிருந்து மீண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது. அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க் வேணடும் என்றார் அமைச்சர் எஸ். ரகுபதி.
இதையடுத்து காரையூர் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும்
பணியை அமைச்சர் எஸ். ரகுபதி ஆய்வு செய்தார். இதில், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் உமாமகேஸ்வரி, காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ- ராமசுப்புராம்
உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.