logo
தமிழகத்தில் 5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் 5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

31/May/2021 10:09:51

சென்னை: தமிழகத்தில் 5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு   திங்கள்கிழமை  அளித்த பேட்டியில், தடுப்பூசி தொடர்பாக குற்றச்சாட்டு கூறுவதைத் தவிர்க்க வேண்டும். மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசி பெற்று தரும் பணியை எல்.முருகன் செய்ய வேண்டும். தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை பெற்று தருவது பாஜகவின் கடமை. மொத்தம் 96 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளன.

 தமிழகத்தில் 5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. முழு ஊரடங்கு கசப்பான மருந்தாக இருந்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களுக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிட கூடாது என்பதற்காகவே ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னைக்கு அடுத்து கோவையில் தான் அதிக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வானதி ஸ்ரீனிவாசனுக்கு கோவை மக்கள் மீது அக்கறை இருந்தால் கூடுதல் தடுப்பூசிகளை பெற்றுத்தர முயற்சி எடுக்க வேண்டும். தமிழகத்தில் புதிய பாதிப்பை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மிக விரைவில் தொற்று இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும். தமிழகம் முழுவதும் நடமாடும் கடைகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.

Top