02/Jun/2021 10:53:26
புதுக்கோட்டை, ஜுன்: புதுக்கோட்டை கம்பன் கழகத்தலைவர் ஆர். ராமையா(93) வயது மூப்பின் காரணமாக (1-6-2021) செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் காலமானார்.
அவரது உடல் நிஜாம் காலனி இல்லத்தில் இருந்து சொந்த ஊரான வெட்டன்விடுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. இவரது மறைவுக்கு புதுக்கோட்டை கம்பன் கழகச்செயலர் ஆர். சம்பத்குமார் உள்பட பல்வேறு இலக்கிய அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.